தமிழ்நாடு

ட்ரோன் மூலம் கொரோனா விழிப்புணர்வு; மைலாப்பூரில் போலீஸ் புதிய முயற்சி!

Published

on

நேற்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கின் போது மளிகை கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் மதியம் 12 மணி வரையே இந்தக் கடைகள் திறந்திருக்க அனுமதி உண்டு.

இந்தக் காலக்கட்டத்தில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டு வரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. இந்த எண்ணிக்கையை குறைக்கவே மாநிலம் தழுவிய அளவு ஊரடங்கு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல் துறை, கொரோனா விழிப்புணர்வை வித்தியாசமான முறையில் மேற்கொண்டு உள்ளனர்.

மைலாப்பூரில் ட்ரோன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளது காவல் துறை.

 

Trending

Exit mobile version