இந்தியா

பி.பி.ஈ கிட் அணிந்து தாலி கட்டினார் மணமகன்: கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Published

on

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகன், திருமணம் தள்ளிப் போக கூடாது என்பதால் திட்டமிட்ட தேதியில் திருமணத்தை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே திருமணம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த ஆலப்புழா என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மணமகனுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இரு தரப்பு உறவினர்களும் திருமண தேதியை தள்ளி வைக்க வேண்டாம் என்றும் கொரோனா வார்டிலேயே திருமணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே திருமணம் நடைபெற்றது. மணமகள் பி.பி.ஈ கிட் அணிந்து இருந்த நிலையில் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார்.

இந்த திருமணத்திற்கு பி.பி.ஈ கிட் அணிந்து கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா வார்டிலேயே திருமணம் நடந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version