இந்தியா

இந்தியாவில் பிப்ரவரியில் 3வது அலை: ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்படுமா?

Published

on

உலகின் பல நாடுகள் ஏற்கனவே கொரோனா மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

2020 ஆம் ஆண்டு கொரோனா முதல் அலையும் 2021 ஆம் ஆண்டில் கொரோனா இரண்டாவது அலையும் இந்தியா முழுவதும் பரவி மிகப்பெரிய உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் மூன்றாவது அலை தாண்டவம் ஆடி வருகிறது என்பதும் இதனால் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை வரும் பிப்ரவரி மாதம் ஏற்படும் என மருத்துவ வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 23 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா மூன்றாவது அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமோ? என்று மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

Trending

Exit mobile version