பிற விளையாட்டுகள்

கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினா அணி சாம்பியன்

Published

on

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் பிரேசில் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெறும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று பிரேசில் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் மீண்டும் பிரேசில் அணி வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அர்ஜென்டினா அணி அதிரடியாக பிரேசிலை வீழ்த்தியது.

இந்த போட்டியில் 22 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் ஏஞ்சல் டி மரியா வெற்றிக்கு காரணமான கோலை அடித்தார். அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்க முயன்ற போதும் ஆட்டநேர இறுதிவரை கோல் போட முடியவில்லை. இதனை அடுத்து 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உள்ளது.

மேலும் அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை 15வது முறையாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோபா அமெரிக்கா தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற உருகுவே என்ற நிலையில் அந்நாட்டின் சாதனையை அர்ஜென்டினா அணி தற்போது சமன் செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் 1993-ம் ஆண்டுக்குப் பிறகு கோபா அமெரிக்க தொடரை அர்ஜெண்டினா அணி தற்போதுதான் கைப்பற்றியது உள்ளது என்பதும், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இந்த மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version