வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் வேலை!

Published

on

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் காலியிடங்கள் 1478 உள்ளது. இதில் உதவியாளர், கிளார்க் வேலைக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடைய, தகுதியான ஆண், பெண் இருந்தல் விண்ணப்பியுடங்கள்.

மொத்த காலியிடங்கள்: 1337

வேலை: உதவியாளர், கிளார்க்

மாத சம்பளம்: ரூ.11,900 – 32,450 (பணிக்கு தகுந்தாற்போன்று சம்பளம் மாறுதலுக்கு உட்பட்டது)

வயது: 01.01.2001 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

கட்டணத்தை அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் அல்லது கிளைகளில் நேரடியாகச் செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்ட ரசீதியில் உள்ள Journel ID என்ற எண்ணை விண்ணப்பதாரர், தமது விண்ணப்பத்தில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறிப்பிட்டு கட்டணம் செலுத்திய ரசீதை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள “SBI Collect” என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டி.ல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான அட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறை பின்பற்றப்பட்டு வேலை தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் www.drbdharmapuri.net என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட வாரியான கூட்டுறவு வங்கிகளின் காலியிடம், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விவரம்:

மேலும் முழுமையான விவரங்கள் அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version