சினிமா செய்திகள்

கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்: அதுவும் பி.எம்.டபிள்யூ காரா?

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கும் புகழ் சமீபத்தில் கார் வாங்கிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் கார் வாங்கியுள்ளார். அதுவும் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட பல மடங்கு பிரபலமாகி விட்டது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் தற்போது பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார்.

இது குறித்த வீடியோவை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் கோமாளிகளில் ஒருவரான தங்கத்துரை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் தங்கதுரை, ரக்‌ஷன், பப்பு ஆகியோர் வெங்கடேசன் பட் வாங்கிய புதிய பிஎம்டபிள்யூ காரில் பயணம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

ஏற்கனவே வெங்கடேஷ் பட், யூடியூபிலும், விஜய் டிவியிலும் பிரபலமாக இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் அவர் வேற லெவலுக்கு பிரபலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி அவருக்கு வருமானமும் அதிகரித்துள்ளதை அடுத்து தற்போது அவர் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version