சினிமா செய்திகள்

‘குக் வித் கோமாளி’ இந்த வாரம் ஃபைனல் கிடையாதா?

Published

on

 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5 பேர்களில் டைட்டில் பட்டம் வெல்வது யார் என இந்த வாரம் ஞாயிறு அன்று தெரியும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் புர்மோ வீடியோவில் இருந்து இந்த வாரம் இறுதி போட்டி கிடையாது என்பது தெரிய வருகிறது. இந்த வாரம் செலிபிரிட்டி வாரம் என்றும் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு செலிபிரிட்டியுடன் வந்திருப்பதாகவும் புர்மோ வீடியோவில் உள்ள காட்சிகள் கூறுகின்றன.

இதனை அடுத்து இந்த வாரம் இறுதிப் போட்டி இல்லை என்பதால் அநேகமாக அடுத்த வாரம் இறுதிப்போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த நிகழ்ச்சியை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த வாரமும் வேறு ஏதாவது நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version