டிவி
அரசியல் சர்ச்சையில் சிக்க வைக்கப்பட்டாரா ‘குக்கு வித் கோமாளி’ சிவாங்கி..?
சமீபத்தில் சென்னைக்கு பிரதமர் மோடி வந்த போது ‘குக்கு வித் கோமாளி’ சிவாங்கி பதிவிட்ட ஒரு ட்வீட் வைரல் ஆனது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு நலத் திட்டங்களை தொடங்கி வைக்க சென்னைக்கு வந்தார். அன்று நடிகை ஓவியா ‘GoBackModi’ என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வைரல் ஆக இன்று அவருக்கு அது வினையாகி உள்ளது. இதேபோல் குக்கு வித் கோமாளி புகழ் சிவாங்கி GoBackModi என ட்விட்டரில் பதிவிட அதுவும் சர்ச்சையானது.
சிவாங்கி சின்ன குழந்தை போல டிவி நிகழ்ச்சிகளில் செல்ல சேட்டைகள் செய்து கொண்டிருப்பார். ஆனால், இதென்ன அரசியல் பதிவு? இதெல்லாம் வளர்ந்து வரும் சூழலில் சிவாங்கிக்கு தேவைதானா? என்பது போன்ற கமென்ட்க்கள் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால், இதற்கு சிவாங்கியின் தந்தை பாடகர் கிருஷ்ணகுமார் விளக்கம் வெளியிட்டுள்ளார்.
சிவாங்கி சமுக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறார் என்றும் ட்விட்டர் தளத்தில் சிவாங்கிக்கு கணக்கு இல்லை என்றும் சிவாங்கியின் அப்பா விளக்கம் கொடுத்துள்ளார். ட்விட்டரில் சிவாங்கி க்ரிஷ் என்ற பெயரில் இருக்கும் அந்தப் போலி கணக்கை 11 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பின் தொடர்வதால் தான் இந்தக் குழப்பமே ஏற்பட்டுள்ளது என்றும் ட்விட்டர்வாசிகள் பேசி வருகின்றனர்.