சினிமா செய்திகள்

’குக் வித் கோமாளி’ சீசன் 3: 8 குக்குகள், 8 கோமாளிகள் இவர்கள் தான்!

Published

on

’குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சி சுமாரான வெற்றி பெற்ற நிலையில் சீசன்2 நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த சீசனில் கலந்து கொண்டவர்கள் பலர் தற்போது திரையுலகில் நுழைந்து தங்களது திறமையை காண்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா, ஷிவாங்கி, புகழ் ஆகியோர் திரையுலகில் பிஸியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’குக் வித் கோமாளி முதல் புரமோவில் நான்கு கோமாளிகளான சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி, பாலா ஆகியோர் உறுதி செய்யப்பட்டனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள அடுத்த புரமோ வீடியோவில் எட்டு குக்கூகள் மற்றும் எட்டு கோமாளிகள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி, ராட்சசன் பட நடிகை அம்மு அபிராமி, காமெடி நடிகை வித்யூலேகா, ’கனா’ பட நடிகர் தர்ஷன், நடிகர் இயக்குனர் மனோபாலா, நடிகர் கருணாஸ் மனைவி கிரேஸ், சார்பாட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் பாடகர் அந்தோணிதாசன் ஆகிய 8 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த சீசனில் கோமாளிகளாக ஏற்கனவே இருந்த மணிமேகலை, ஷிவாங்கி, பாலா மற்றும் சுனிதா ஆகிய நால்வருடன் இந்த சீசனில் குரேஷி, பரத், மூக்குத்தி முருகன் ஆகியோர்களும் கோமாளிகளாக கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version