சினிமா செய்திகள்

’குக் வித் கோமாளி’சீசன் 3 எப்போது? செஃப் வெங்கடேஷ் பட் தகவல்!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி வேற லெவலில் வெற்றி பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே சினிமாவில் வாய்ப்புகள் பெற்று விட்டனர் என்பதும் தெரிந்ததே. அதேபோல் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி என்பதும் அவரும் தற்போது பிசியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி அடுத்த சீசன் எப்போது? என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே இது குறித்து பேட்டியளித்த புகழ் இன்னும் மூன்று மாதங்களில் அடுத்த சீசன் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சிசன் 1 மற்றும் சீசன் 2 நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது குக் வித் கோமாளி சீசன் 3 அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கும் என்று கூறினார். எனவே இன்னும் இரண்டு மாதங்களில் சீசன் 3 தொடங்கப்போகிறது என்பது ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.

மேலும் நேற்றுதான் கன்னடத்தில் குக் வித் கிறுக்கு நிகழ்ச்சி முடிவடைந்து உள்ளதாகவும் நேற்று இறுதி போட்டி நடைபெற்றதாகவும் வெங்கடேஷ் பட் தெரிவித்தார். மேலும் தனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் தன்னுடைய துறை வேறு என்பதால் தான் தான் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் சிம்பு தன்னிடம் ஒரு படத்தில் நடிக்க கேட்டு கொண்டு இருப்பதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே விரைவில் வெங்கடேஷ் பட் அவர்களை திரையில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version