சினிமா செய்திகள்

விஜய் டிவியிலிருந்து விலகிய புகழ்: அதிர்ச்சி தகவல்

Published

on

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், விஜய் டிவியில் இருந்து விலகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் மிகப்பெரிய அளவில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி என்று கூறலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் பழைய நிகழ்ச்சிகளை ஹாட்ஸ்டார் மூலம் இலட்சக்கணக்கானோர் கண்டு ரசித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களில் ஒருவர் புகழ். இவர் தற்போது அஜித் நடிக்கும் ’வலிமை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஒரே நேரத்தில் 15 படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் கூட ’காசேதான் கடவுளடா’ என்ற படத்தின் ரீமேக்கில் புகழ் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி படவாய்ப்புகள் குவிந்து வருவதை அடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சில நாட்கள் பங்கேற்காமல் இருக்கலாம் எனப் புகழ் முடிவு செய்ததாகவும் எனவே தற்போதைக்கு விஜய் டிவியிலிருந்து அவர் விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜய்டிவி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3இல் அவர் புகழ் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்றும் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் விஜய் டிவியை தான் மறக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version