சினிமா செய்திகள்

ஐந்து மொழிகளுக்கு செல்கிறது ‘குக் வித் கோமாளி’

Published

on

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக ‘குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. முதல் சீசன் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் 2வது சீசனுக்கு கிடைத்துள்ள ஆதரவை பார்த்து விஜய் டிவியே மிரண்டு உள்ளது.

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியை ஐந்து மொழிகளில் ஒளிபரப்ப ஸ்டார் குரூப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல் கட்டமாக கன்னடத்தில் ‘குக் வித் கிறுக்கு’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக விளம்பரமும் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கிறுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் ‘குக்’கள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஸ்டார் குரூப் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து குக் வித் கோமாளி பல மொழிகளில் உருவாக உள்ளது அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version