டிவி
‘குக்கு வித் கோமாளி’ அஸ்வின் உடன் க்யூட் நடனம் ஆடிய சிவாங்கி- வைரல் வீடியோ!
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த சிவாங்கி- அஷ்வின் ஆகிய இருவரும் மற்ற கோமாளிகள் உடன் இணைந்து க்யூட் நடனம் ஆடிய வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 2 ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடர்ந்து வருகிறது. இந்த சமையல் நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகளே அதிக ரசிகர்களையும் ஆர்மிகளையும் கொண்டு உள்ளனர். குறிப்பாக புகழ், சிவாங்கிக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். புகழ் நிகழ்ச்சி வரும் அத்தனைப் பெண்களையும் ரொமான்ஸ் செய்ய மறுபக்கம் சிவாங்கி, அஷ்வின் உடன் உருகிக் கொண்டிருப்பார்.
சமீபத்தில் நடந்த குக்கு வித் கோமாளி ஷூட்டிங் இடத்தில் மணிமேகலை ஆடிக் கொண்டிருக்க நடுவில் சேரும் சிவாங்கி- அஷ்வ்வின் ‘ஒத்தையடிப் பாதையிலே’ பாடலுக்கு க்யூட் ஆக டான்ஸ் ஆட அந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.