சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த ‘குக்கு வித் கோமாளி’ செல்லமான பிரபலம்..!
![don- Sivakarthikeyan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/image-24.jpg)
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடிப்பதற்கு ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் செல்லப் போட்டியாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்த ஒரு மாதத்திலேயே தமிழின் முதல் சயிண்டிஃபிக் படமான அயலான் திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் தனது அடுத்தப் படமான ‘டான்’ திரைப்படத்துக்கான படப்பிடிப்புகளில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்.
டான் திரைப்படத்தை அறிமுக இயக்குநரான சிபிச் சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை லைகா உடன் இணைந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வழங்க உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவருடன் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன், பிரியங்கா உடன் சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், ஆர்ஜே விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் விஜய் டிவி-யில் சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி எனக் கலக்கிக் கொண்டிருக்கும் சிவாங்கி இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
????Welcome on-board @RJVijayOfficial & #Sivaangi for our #DON ????@Siva_Kartikeyan @KalaiArasu_ @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial #Munishkanth @Bala_actor @kaaliactor @LycaProductions @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/l3pAXRnO13
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 10, 2021