டிவி

முதன்முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட ‘குக்கு வித் கோமாளி’ பிரபலம்

Published

on

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் முக்கியப் பிரபலம் ஒருவர் தனது மனைவியின் புகைப்படத்தை முதன்முறையாக பொது வெளியில் வெளியிட்டுள்ளார்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு சீசன்களாக தொகுப்பாளராகக் கலக்கி வருபவர் விஜே ரக்‌ஷன். ரக்‌ஷனுக்கும் அவருடன் தொகுப்பாளராகப் பணியாற்றிய ஜாக்குலினுக்கும் காதல் என்று முதலில் ஒரு வதந்தி கிளம்பியது. அடுத்து சமீபத்தில் விஜே சித்ரா மறைந்த பின்னர் அவரை விஜே ரக்‌ஷன் லவ் டார்ச்சார் செய்தார் என்ற செய்தியும் புரளியாகப் பரவியது.

ஆனால், தன் மீதான புரளிகளைத் தொடர்ந்து மறுத்து வந்த ரக்‌ஷன் தனக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என விளக்கம் கொடுத்தும் புரளிகள் அடங்கியபாடில்லை. இந்த சூழலில் ரக்‌ஷன் முதன்முறையாகத் தன் காதல் மனைவியின் புகைப்படத்தை ரசிகர்களுக்காக சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரக்‌ஷன் பகிர அது தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Trending

Exit mobile version