சினிமா செய்திகள்

பாபா பாஸ்கருக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? வைரல் புகைப்படம்

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘குக்’களும், கோமாளிகளும் அவர்களே எதிர்பாராத அளவிற்கு பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் இவர்களில் ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட அனைவருக்குமே பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பது உறுதியாகி உள்ளது

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் பாபா பாஸ்கர் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியை இந்த அளவுக்கு புகழ் பெறுவதற்கு இவரும் ஒரு காரணம் என்பதும், நிகழ்ச்சி முழுவதும் பாசிட்டிவ் எனர்ஜி உடன் செட்டில் ஜாலியாக இருக்கும் பாபா பாஸ்கர் அனைவரையும் கலாய்ப்பது மட்டுமின்றி சமையலிலும் தனது திறமையை நிரூபித்துள்ளதால் இறுதிப்போட்டி வரை வந்துள்ளார்.

மேலும் குக் வித் கோமாளில் செட்டில் இவர் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது இவர் ‘குக்கா? அல்லது கோமாளியா? என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி சக ‘குக்’களுக்கும் அடிக்கடி வந்துள்ளது.

இந்த நிலையில் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. பாபா பாஸ்கரின் மனைவி, மகன் மற்றும் மகளுடன் அவர் எடுத்துள்ள புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் ’பாபா பாஸ்கருக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? என்று ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்

Trending

Exit mobile version