சினிமா செய்திகள்

’குக் வித் கோமாளி’ அஸ்வின் பட டைட்டிலை வெளியிட்ட ஆர்யா

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்றும் இந்த படத்தை டிரைடண்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்தர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிரைடண்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில், அஸ்வின் நடிப்பில் ஹரிஹரன் என்பவர் இயக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானதை அடுத்து அஸ்வின் திரையுலகில் அறிமுகம் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டு கனவில் கோவையில் இருந்து சென்னை வந்த அஸ்வினுக்கு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்து அதன் மூலம் பிரபலமடைந்து தற்போது ஹீரோவாக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெற்றி பெற்றால் அவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version