தமிழ்நாடு

குக்கருக்கு மல்லுக்கட்டும் தினகரன்: இன்று தீர்ப்பு!

Published

on

குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தினகரன் வரவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட தங்கள் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யதார்.

இந்த வழக்கு கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரனின் அமமுக கட்சி பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி எனவே அவர்களுக்கு நிரந்தர சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடப்பட்டது.

ஆனால் இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களால் அமமுகவை பதிவு செய்ய இயலாது எனவும் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியும் என்கிற வகையிலும் தினகரன் தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் குக்கர் சின்னம் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று தினகரன் தரப்பினர் நம்பிக்கையோடு உள்ளனர்.

Trending

Exit mobile version