சினிமா

சொந்த உழைப்பில் சொந்த கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ புகழ்!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்காக சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் எப்போது வரும் என்று காத்திருக்கும் நிலை தான் ரசிகர்கள் மத்தியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளி புகழ் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. கடந்த வாரம் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் அவர் ரம்யாவிடம் கொஞ்சிய கொஞ்சல்கள், ஷிவாங்கியிடம் செய்த சேட்டைகள், பாபா பாஸ்கரிடம் செய்த அட்ராசிட்டி தாங்க முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த புகழ் விஜய் டிவியில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி தற்போது சொந்த கார் வாங்கும் அளவிற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .சொந்த உழைப்பில் சொந்த காசில் சொந்தமாக கார் வாங்கிய புகழுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்ஜி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வாழ்த்துக்கள் புகழ் சகோ.. புதிய வாகனத்திற்கு.. சொந்த உழைப்பில் வெற்றி பெறுவதை விட பெருமை இந்த உலகில் எதுவும் இல்லை

Trending

Exit mobile version