இந்தியா

அமைச்சரின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரல்: முதல்வர் அதிரடி நடவடிக்கை

Published

on

அமைச்சர் ஒருவரின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை அடுத்த முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜார்ஜிஹோலி என்பவரின் ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் ரமேஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் ஜார்ஜிஹோலி மீது முதல்வர் எடியூரப்பா உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதனால் கர்நாடக பாஜகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version