சினிமா செய்திகள்

சர்ச்சைப் புயலைக் கிளப்பும் விஜய் டிவியின் புதிய சீரியல் – பொங்கும் நெட்டிசன்கள்!

Published

on

தமிழ் மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி. அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ள புதிய சீரியல் குறித்தான ப்ரொமோ பலத்த கண்டனங்களைப் பெற்றுள்ளது.

ரியாலிட்டி ஷோக்களுக்காகவும், வித்தியாசமான நெடுந் தொடர்களுக்காகவும் பெயர் போனது விஜய் டிவி. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த சிவகார்த்திகேயன், ம.க.ப, புகழ், சந்தானம், சிவாங்கி, நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி படைப்பாளிகளாக உருவெடுத்து உள்ளார்கள்.

இந்நிலையில் அந்த நிறுவனம், ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ என்னும் புதிய சீரியலை தயாரித்து வருகிறது. அந்த சீரியல் குறித்தான ப்ரொமோ தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அந்தப் ப்ரொமோவில் சொல்லப்பட்டு இருக்கும் கருத்துகள் சர்ச்சைகளை எழுப்பி உள்ளன.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ப்ரொமோ வீடியோ:

இந்த வீடியோவுக்குக் கீழ் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள கமென்டுகளைப் பார்த்தால் இதற்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு உள்ளது என்பது புரியும்.

Trending

Exit mobile version