தமிழ்நாடு

கனமழை எதிரொலி: சென்னையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Published

on

சென்னையில் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து மழை, வெள்ள சேதங்களை உடனுக்குடன் அறிந்து அந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

சென்னையில் மழை பெய்த இடம் குறித்து 1913 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் உடனடியாக மீட்பு படையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேதம் ஏற்பட்ட பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையில் மட்டும் 50 இணைப்புகள் இருப்பதாகவும் இந்த இணைப்புகளை தொடர்பு கொண்டு உடனடியாக மீட்பு நடவடிக்கை குறித்த தகவல்களை அறிவிக்கலாம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ’நம்ம சென்னை’ செயலிலும் வெள்ள சேதம் குறித்த புகார்களை அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து எந்த பகுதியில் மழை காரணமாக சேதம் ஏற்பட்டுள்ளதோ, அந்த பகுதியை குறிப்பிட்டால் மாநகராட்சி அருகில் உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Trending

Exit mobile version