இந்தியா

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

Published

on

இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து மூன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், முதல் நிலநடுக்கம் 7:21 மணிக்கு 4.6 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் 9.12 மணி அளவில் 6.1 ரிக்டர் அளவிலும், மூன்றாவது நிலநடுக்கம் 9.11 மணி அளவில் 5.9 ரிக்டர் அளவிலும் ஏற்பட்டது.

அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல் வெளிவரவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்றும் நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து வெட்டவெளியில் நின்று கொண்டிருந்த காட்சியை காண முடிந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலநடுக்கும் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், மேலும் இதே இடத்தில் நிலநடுக்கம் ஏற்படுமா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version