தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகள் திறக்க தமிழக அரசு திட்டம்: பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு!

Published

on

பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனை கணக்கில் கொண்டு தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அவர்களுடைய கருத்துக்களை கேட்ட பின்னர் அவர் 20ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சுதந்திர தின உரையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version