இந்தியா

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி; பாஜக படுதோல்வி!

Published

on

பஞ்சாபில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. பாஜக இந்தத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடந்த இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் உள்ள 7 முனிசிப்பாலிட்டிகள் அனைத்தையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, 109 முனிசிப்பல் கவுன்சில்கள், 7 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடந்தது. அதில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது.

மொத்தம் 9,222 பேர் இந்த தேர்தலில் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர். அதில் காங்கிரஸ் சார்பில் 2,037 பேர் போட்டியிட்டனர். பாஜக 1,003 பேரை தேர்தலில் நிறுத்தியது. இதில் பெரும்பான்மையான இடங்களை காங்கிரஸ் கட்சிக் கைப்பற்றி பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துக்குப் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் தான் அதிகளவில் பங்கெடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில் நடந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை அடைந்துள்ளது.

Trending

Exit mobile version