தமிழ்நாடு

நாடு முழுவதும் பாதாளத்திற்கு செல்லும் காங்கிரஸ்: தமிழகம் மட்டும் கைகொடுத்ததால் நிம்மதி!

Published

on

இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி படு பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் மட்டும் அக்கட்சிக்கு கைகொடுத்து வருகிறது

2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி 2019ஆம் ஆண்டு எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஒரு காலத்தில் மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது பூஜ்யம் ஆகியுள்ளது.

அதேபோல் அஸ்ஸாம் மற்றும் கேரளாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுவை மாநிலத்திலும் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்த நிலையில் ஆட்சியை இழந்தது

இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மட்டும் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வென்றுள்ளது அதுமட்டுமின்றி கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலிலும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மற்ற மாநிலங்களில் படுதோல்வி அடைந்து வந்தாலும், மத்தியில் ஆட்சியை இழந்தாலும் தமிழகம் மட்ட்ய்ம் காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதலை கொடுத்துள்ளது என்பது தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு உற்சாகமான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version