இந்தியா

மத்தியப் பிரதேசத்திலும் ஆட்சியை இழந்தது பாஜக: காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது!

Published

on

நேற்று 5 மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் முடிவு அறிவிக்கப்பட்டு யார் ஆட்சி அமைக்க போகிறார் என்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 24 மணி நேரமாக மத்தியப் பிரதேசத்தில் வாக்கு எண்ணும் பணி நீடித்து வந்தது.

காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்ததால் அங்கு இழுபறி நீடித்து வந்தது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 116 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியாக வாழ்வா, சாவா போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பாஜகவை வீழ்த்தி ஆட்சியை தட்டிப்பறித்துள்ளது.

230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மேலும் அந்த கட்சிக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. பாஜக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் பாஜக சாம்ராஜ்யத்தை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version