இந்தியா

கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மெகா வெற்றி!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு செயேட்சை என 26 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் மஜத தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் கர்நாடாகாவில் கடந்த மே 29-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜத பெருவாரியான இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. இது அரசியல் நோக்கர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 1221 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 506 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸின் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் 174 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆக காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 683 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் பாஜக 366 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது.

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற பாஜகவால் இந்த தேர்தலில் ஏன் வெற்றிபெற முடியவில்லை என்ற கேள்வி கர்நாடகாவில் பலமாக எழுந்துள்ளது. மேலும் இந்த வெற்ற அம்மாநில காங்கிரஸ்காரர்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version