தமிழ்நாடு

காங்கிரஸ், அமமுக, கமல் இணைந்து புதிய கூட்டணியா?

Published

on

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் இன்னும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை சாதகமாகவும் வெற்றிகரமாகவும் சென்று கொண்டிருப்பதாக கேஎஸ் அழகிரி கூறியபோதிலும் காங்கிரஸ் கட்சியில் திமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் 40 தொகுதிகளை கேட்டதாகவும் ஆனால் திமுக கூட்டணி 18 முதல் 20 தொகுதிகள் வரை தான் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியதால் காங்கிரஸ் கட்சி கடும் அதிர்ச்சியில் உள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை அப்படி வெளியேறினால் கமல்ஹாசன் கூட்டணி மற்றும் அமமுக கூட்டணி ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ் ஒரு புதிய கூட்டணியை அமைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதல் முறையாக அதிமுக திமுகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமையும் நிலை ஏற்பட்டுள்ளதை அந்த கட்சிகள் பயன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version