தமிழ்நாடு

மின்சாரம் திருடும் காங்கிரஸ்? ஷாக் அடிக்கும் தேர்தல் களம்!

Published

on

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் உறுதியாகி உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் மீது பல புகார்களை கூறி வருகிறார் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த்.

#image_title

சிவ பிரஷாந்த் தற்போது காங்கிரஸ் கட்சியினர் மீது மின்சாரம் திருட்டு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது, தண்ணீர்பந்தல் பாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மின் சாரத்தை திருடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் காரணமாக பிரதான எதிர்க்கட்சியின் தேர்தல் பிரச்சார செயல்பாடுகள் முடங்கியிருந்தது. ஆனால் தற்போது அதிமுகவின் குழப்பம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதால் அவர்களும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனால் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க முடியவில்லை. இதனால் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி சென்று சில பாய்ண்டுகளில் நிறுத்தி அவர்களை சந்திக்கிறார். இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது எனவும். இது தொடர்பான ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார் அமமுக வேட்பாளர் சிவ பிரஷாந்த்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version