தமிழ்நாடு

திமுக வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவிப்பு!

Published

on

திமுக வேட்பாளருக்கு ஆதரவு இல்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து வரும் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு இல்லை என அந்த பகுதி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நேற்று சிறப்பு கூட்டம் போட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுக போட்டியிட்டது என்றும், கூட்டணி கட்சிக்கு திமுக ஆதரவு கொடுக்கவில்லை என்றும் இதன் காரணத்தினால் தற்போது வேப்பனபள்ளி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் எம்எல்ஏ முருகன் என்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

மேலும் அறிமுக கூட்டம், பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட மாட்டோம் என்று முடிவு செய்து தீர்மானம் இயற்றியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version