தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகபட்ச வெற்றி விகிதத்தைப் பதிவு செய்த காங்கிரஸ்; பாமக-வை பின்னுக்குத் தள்ளி சாதனை!

Published

on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. மேலும் திமுக, அதிமுகவை அடுத்து தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது காங்கிரஸ். திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், தமிழகத்தில் அதிகபட்ச வெற்றி விகிதத்தைப் பதிவு செய்த கட்சியாகவும் மாறியுள்ளது.

காங்கிரஸ், திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 18ல் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 72 சதவீத வெற்றி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது காங்கிரஸ். தமிழகத்தின் வேறு எந்தக் கட்சியும் இப்படியான வெற்றி விகிதத்தைப் பதிவு செய்யவில்லை.

அதேபோல கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி சுமார் 1,30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அங்கு பிரபல ‘வசந்த் அண்ட் கோ’ நிறுவனத்தின் தலைவராக இருந்த வசந்த குமார் எம்.பி-யாக இருந்தார். அவர் சென்ற ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அதனால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தலோடு அந்த தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடந்தது. அதில் வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே பெண் வேட்பாளர் விஜயதாரணி. அவர் விளவங்கோடு தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version