தமிழ்நாடு

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறது காங்கிரஸ்: கமல் கட்சியுடன் கூட்டணியா?

Published

on

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகள் வரை கேட்டு தற்போது 40 தொகுதி வரை இறங்கி வந்து உள்ளது. ஆனால் திமுக பிடிவாதமாக 20 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கூறப்படுகிறதாம். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் குண்டுராவ் டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கடைசியாக 30 தொகுதிகளுக்கு ஒப்பு கொள்ளுங்கள் என்றும், அதற்கும் கீழே ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று கறாராக ராகுல்காந்தி சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 30 தொகுதிகளுக்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கூட்டணியிலிருந்து வெளியேற காங்கிரஸ் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இன்னொரு பக்கம் கமல் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் திமுகவில் 30 தொகுதிகள் கிடைக்காவிட்டால் கமல் கட்சியுடன் இணைந்து போட்டியிட ராகுல்காந்தி ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் அரசியல் குறித்து ராகுல் காந்தி பெருமையாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் அந்த கூட்டணியில் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version