உலகம்

சிபிஐ அலுவலகங்களுக்கு முன் போராட்டம்.. ராகுல் கைதாகி விடுதலை

Published

on

டெல்லி: டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். அவருடன் போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்படுவார்.

முக்கியமாக சிபிஐ தலைமையகம் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறார். மற்ற அலுவலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெவ்வேறு தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லி, சென்னை உட்பட நாடு முழுக்க காங்கிரஸ் போராட்டம் செய்து வருகிறது. சென்னையில் சிபிஐ அலுவலகம் முன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். அவருடன் போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைதான காங்கிரஸ் தலைவர் ராகுல் 30 நிமிடங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.

 

 

 

Trending

Exit mobile version