தமிழ்நாடு

பூரண மதுவிலக்கு, நீட் தேர்வு ரத்து: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை!

Published

on

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் சமீபத்தில் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நீட்தேர்வு ரத்து, பூரண மதுவிலக்கு உட்பட பல அதிரடி அறிவிப்புகள் அந்த தேர்தல் அறிக்கையில் உள்ளன. இது குறித்து தற்போது பார்ப்போம்.


* அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி ஒதுக்கீடு 10%ஆக உயர்த்தப்படும்

*ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்

*உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை

*புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரி விலக்கு

*சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்வோம்

புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை

*கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க நடவடிக்கை

*மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவோம்

விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படும்

*நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

* கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சம உரிமை

* தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்

* மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, மீனவர்கள் பழங்குடியின பிரிவில் சேர்க்க நடவடிக்கை

* 3 விவசாய சட்டங்களுக்கு பதிலாக தமிழகத்தில் விவசாயிகளை பாதுகாக்கும் புதிய சட்டங்கள்

* மாநில தகவல் ஆணையத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர நடவடிக்கை

* நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கை

* காவிரி நீர் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு தன்னாட்சி அமைப்பாக செயல்பட நடவடிக்கை

* கிராம தொழில்களை ஊக்குவிக்க 25 சதவீத மானியத்துடன் கடன் வசதி

* முதியோர் ஓய்வுத்தொகையை உயர்த்தி, அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை

* குடும்ப தலைவராக முதியோர் இருந்தால் வீடு தேடி ரேசன் பொருட்கள் கொண்டு சென்று வழங்கப்படும்.

* கோயில்களில் இந்து மதத்தை சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை

* சாதி மறுப்பு திருமணம் செய்தோர் ஆணவ படுகொலை செய்வதை தடுக்க நடவடிக்கை

* டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெண் கல்வியை ஊக்குவிக்க வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்த நடவடிக்கை

* மின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றால் போல் புதிய மின் திட்டங்கள் துவங்க நடவடிக்கை

* மாதம் ஒரு முறை விசைத்தறியாளர்களுக்கு மின் கணக்கீடு எடுக்க நடவடிக்கை

* பணியின் போது பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை

Trending

Exit mobile version