தமிழ்நாடு

திமுக சொல்வதை கேட்க வேண்டும் என்பது கட்டாயமல்ல: காங்கிரஸ் பிரமுகர் பேசால் பரபரப்பு

Published

on

திமுக சொல்வதை கேட்க வேண்டும் என்பது கட்டாயமல்ல: காங்கிரஸ் பிரமுகர் பேசால் பரபரப்பு

திமுக என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயமல்ல என அக்கட்சியின் எம்பி மாணிக் தாகூர் கூறியுள்ளார்.

விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாணிக்தாகூர் எம்பி ’பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாறுபட்டதாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

திமுக சொல்வதை எல்லாம் ஏற்பது காங்கிரஸில் வேலை அல்ல என்றும் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வதும் திமுகவின் வேலை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை பாஜகவால் நடத்தப்பட்ட சதி என்றும் இதில் முக்கிய கதாபாத்திரம் சீமான் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார் .

தமிழக பாஜகவில் வெறும் 18 பேர்கள் தான் உள்ளனர் என்றும் இந்த பதினெட்டு பேர்களை வைத்துக் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகை இடுவோம் என அண்ணாமலை கூறுவது காமெடி என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

திமுக குறித்து கடுமையாக காங்கிரஸ் பிரமுகர்கள் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருவதை அடுத்து திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version