இந்தியா

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விற்பனைக்கு இல்லை: பாஜகவுக்கு மபி முதல்வர் கமல்நாத் பதிலடி!

Published

on

கர்நாடகாவில் 16 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை மும்பையில் தங்க வைத்து காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை கலைத்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது பாஜக. இந்நிலையில் இதே ஃபார்முலாவை பயன்படுத்தி மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கலைக்க பாஜக முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை 24 மணி நேரத்தில் கலைத்துவிடலாம், தலைமையின் சிக்னலுக்காக காத்திருக்கிறோம் என பாஜக தலைவரும், அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான கோபால் பார்கவா கூறியுள்ளார். இது தேசிய அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக தலைவரின் இந்த கருத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இங்கு விற்பனைக்கு கிடையாது, எப்போது பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோரினாலும் அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். 231 எம்எல்ஏக்களை கொண்ட மாநில சட்டசபையில் 121 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக கமல்நாத் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version