தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வி! சபாநாயகர் அறிவிப்பு

Published

on

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து அவருடைய அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையில் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் தனது பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை புதுவை சட்டமன்றம் கூடிய நிலையில் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பே முதல்வர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபையில் இருந்து வெளியேறினர். இதனை அடுத்து புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைyai இழந்தது என பேரவையில் சபாநாயகர் சிவக்கொழுந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை விரைவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version