இந்தியா

தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்: தேர்தலுக்கு முன்பே கணித்த பிரசாந்த் கிஷோர்

Published

on

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என தேர்தலுக்கு முன்பே தேர்தல் வியூகமன்னர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் சேர கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசாந்த் கிஷோர் முயற்சி செய்தார். ஆனால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது .

ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரை உள்ளே விட்டால் தங்கள் குடும்பத்தை பின்னுக்கு தள்ளி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவரை காங்கிரஸ் சேர்க்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவர் பீகாரில் தனிக் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்றால் பாஜக தான் இந்த இரண்டு மாநிலங்களில் வெற்றி பெறும் என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version