தமிழ்நாடு

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தமிழகத்தில் பாஜக வலுவான தொகுதிகளில் ஒன்று கன்னியாகுமரி. இந்த தொகுதியில் இருந்து கடந்த முறை தேர்வாகி மக்களவைக்கு சென்று அமைச்சரானவர் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன். கடந்த முறை அதிமுக 37 தொகுதிகளில் வென்றபோது, கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக திமுக காங்கிரஸை எதிர்த்து வென்று காட்டியவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

கன்னியாகுமரி தொகுதியில் அதிக செல்வாக்கு மிக்கவராக வலம் வந்த தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இந்தமுறையும் அங்கு பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இவரை கடந்தமுறை எதிர்த்த காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் இந்தமுறையும் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 38130 வாக்குகளும், பொன்.ராதாகிருஷ்ணன் 14487 வாக்குகளும் பெற்றுள்ளனர். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 23643 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version