தமிழ்நாடு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்

Published

on

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஆக இருந்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி. இவருக்கு வயது 84. 1981-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரையில் தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவர் ஆக இருந்தவர். 1984-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் என்ற பதிவியிலும் இருந்துள்ளார். ஒரு காலகட்டத்தில் தனிக்கட்சி தொடங்கி அப்போது தனது ஆதரவை அன்றைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கி தனது கட்சியையும் களைத்துவிட்டார்.

எம்.எல்.ஏ, எம்.பி, எதிர்கட்சித் தலைவர் எனத் தீவிர அரசியலில் பல பதவிகளை வகித்து வந்த திண்டிவனம் ராமமூர்த்தி சமீப காலமாக அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்தார். இன்று உடல்நலக் குறைவால் காலமான திண்டிவனம் ராமமூர்த்திக்கு பல அரசியல் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version