தமிழ்நாடு

கையை முறுக்குவது, மிரட்டுவதை எல்லாம் பார்த்துவிட்டோம்.. சர்காருக்காக வந்த குஷ்பு!

Published

on

சென்னை: சர்கார் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்து இருக்கிறார்.

அதிமுகவினரின் போராட்டம் காரணமாக இந்தியா முழுக்க தற்போது சர்கார் படம் வைரல் ஆகியுள்ளது. தீபாவளியன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியானது.

இந்த படத்தில் நிறைய அரசியல் தொடர்பான  காட்சிகள் உள்ளது. இதனால் இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குஷ்பு தனது டிவிட்டில், தமிழ்நாட்டு மக்கள் மீது அரசு தனது அதிகாரத்தை தவறுதலாக திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்க பார்ப்பது எல்லாம் புதிதல்ல, இதையெல்லாம் ஏற்கனவே பல விஜய் படங்களுக்கு பார்த்துவிட்டோம்.

அரசியல்வாதிகள் ஏன் இந்த விவகாரத்தை இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டார்கள். பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக, என்றுள்ளார்.

 

 

 

Trending

Exit mobile version