தமிழ்நாடு

கைகட்டி சேவகம் செய்த; பாஜக அரசின் தளபதி: தம்பிதுரையை விளாசிய காங்கிரஸ்!

Published

on

அதிமுக, பாஜக கூட்டணி அமைவதற்கு முன்னர் பாஜகவை கடுமையாக அதிமுகவில் விமர்சித்து வந்தவர் மக்களவை துணை சபாநாயகரும், எம்பியுமான தம்பிதுரை. அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமையாது என தொடர்ந்து கூறி வந்தார். மேலும் பாஜகவை ஊடகங்களிலும், மக்களவையிலும் கடுமையாக விமர்சித்து வந்தார் தம்பிதுரை.

பாஜகவை தமிழகத்தில் தூக்கி சுமக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என கடுமையாக விமர்சித்து வந்த தம்பிதுரை, அதிமுக, பாஜக, பாமக கூட்டணிக்குப் பிறகு பாஜகவை வரவேற்றுப் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று கரூரில் பேசிய தம்பிதுரை, அடுத்த பாரதப் பிரதமராக மீண்டும் மோடிதான் வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். தமிழக நலனுக்காக மத்தியில் நிலையான ஆட்சி அமைய அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணியால் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் என்றார்.

இதனையடுத்து தம்பிதுரையின் இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜோதி மணி தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசியுள்ளார். அதில், பாஜகவுக்கு நாலரை ஆண்டுகள் கைக்கட்டி சேவகம் செய்துவிட்டு, 48 மணி நேரத்திற்கு மட்டும் எதிர்த்த மாவீரர், பினாமி பாஜக அரசின் தளபதி தம்பிதுரை பராக்! பராக்! என பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version