இந்தியா

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாததற்குக் காரணம் காங்கிரஸ்.. நிர்மலா சீதாராமன் சாடல்!

Published

on

பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை அதிகரித்த போது, 1.44 லட்சம் கோடி ரூபாய்க்கு எண்ணெய் பத்திரம் விநியோகிக்கப்பட்டது. அந்த எண்ணெய் பத்திரத்திற்கு வட்டி வருவாய் வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

அந்த எண்ணெய் பத்திரத்துக்காக, கடந்த 5 ஆண்டில் 70,195.72 கோடி ரூபாய் வட்டி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் பத்திரம் இல்லை என்றால், எண்ணெய் மீதான கலால் வரியைக் குறைத்து இருக்க முடியும்.

1.34 லட்சம் கோடி ரூபாயில் 3,500 கோடி ரூபாய் அசல் பணம் மட்டுமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. 2025-2026 நிதியாண்டுக்குள் 1.3 லட்சம் கோடி ரூபாய் திருப்பி அளிக்க வேண்டும்.

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,000 கோடி ரூபாய் அளிக்க வேண்டும். 31,150 கோடி ரூபாய் 2023-2024 நிதியாண்டில் கொடுக்க வேண்டும். தொடர்ந்து 52,860.17 கோடி ரூபாய், 36,913 கோடி ரூபாய் அடுத்தடுத்த ஆண்டு அரசு திருப்பி செலுத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல் மூலம் வருவாயில் குறிப்பிட்ட அளவிலான பணம் எண்ணெய் பத்திரத்தின் வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பிச் செலுத்த மட்டும் தேவைப்படுகிறது. இன்னும் வட்டி மட்டும் 37,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது என நிர்மலா சீத்தாராமான கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்காத நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு 3 ரூபாய் வரையில் வரியை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version