தமிழ்நாடு

தமிழக தேர்தல்: காங்கிரஸ் மற்றும் பாஜக பெற்ற வெற்றி தோல்வியின் மதிப்பீடு

Published

on

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து முடிந்துள்ள நிலையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மாநில கட்சிகளான திமுக அதிமுக தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது என்பதும் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை மாநில கட்சிகளுடன் கூட்டணியில் தான் ஒரு சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளை பெற்றது. அந்த 25 தொகுதிகளில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு காங்கிரஸ் வெற்றி பெற்று தமிழகத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதை உறுதி செய்துள்ளது. கோவை தெற்கு, உடுமலைப்பேட்டை, ஓமலூர், கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஊத்தங்கரை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அக்கட்சி வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை தெற்கு, நெல்லை, நாகர்கோவில் மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் மட்டும் தான் பாஜக வென்றுள்ளது என்பதும் எல் முருகன், அண்ணாமலை, எச்.ராஜா, குஷ்பு உள்பட பல பிரபலங்கள் அக்கட்சியில் தோல்வி அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளாஜ காங்கிரஸ், பாஜகவை ஒப்பிடும்போது பாஜகவை விட காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version