தமிழ்நாடு

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்!

Published

on

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஜொரம் இப்பொழுதே ஆரம்பித்துள்ளது. அதிமுக ஒருவழியாக கூட்டணி, தொகுதி பங்கீடு என முன்னேறி செல்ல, திமுகவும் தனது பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரி ஆகியோர் இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்குப் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக அதிமுகவை தாக்கிப்பேசினார். அதில் ஹோட்டலில் ரகசியமாகக் கூடாமல், தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த கூட்டணி ஒப்பந்தத்தின் போது திமுக, காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் உடனிருந்தனர்.

seithichurul

Trending

Exit mobile version