இந்தியா

கேளிக்கை விருந்தில் ராகுல் காந்தியா? காங்கிரஸ் கட்சி விளக்கம்

Published

on

கேளிக்கை விருந்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டதாக வீடியோ இன்று காலை முதல் வைரல் ஆகி விட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

ராகுல் காந்தி நேபாளம் தலைநகர் காட்மண்டுவில் கேளிக்கை விருந்தில் கலந்து கொண்டதாகவும் அவருடன் சீனாவை சேர்ந்த பெண் தூதரகர் ஒருவர் நெருக்கமாக இருந்ததாகவும் ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி அவரது நண்பரின் திருமண நிகழ்ச்சி என்று காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது. நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டதை வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதாகவும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டது ஒரு குற்றமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்

Trending

Exit mobile version