தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர்களுக்கு மோடி மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: வலியுறுத்தும் காங்கிரஸ் தலைவர்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை.

இதனையடுத்து மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த மோடி ஆட்சியின் போது தமிழகத்தில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தார். ஆனால் இந்தமுறை அவரும் தோல்வியை தழுவியுள்ளார்.

இதனால் தமிழக பாஜகவிலிருந்து ஒருவர்கூட மத்திய அமைச்சர் ஆக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி மூலமாக மத்திய அமைச்சராவதற்கு சில தமிழக பாஜக தலைவர்கள் முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு சிபாரிசு செய்யும் வகையில் பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திக்க சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடிக்குத் தமிழகம் மீது அக்கறை இருந்தால் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என வேண்டுகோள் வைத்தார்.

seithichurul

Trending

Exit mobile version