தமிழ்நாடு

ஜி.கே.வாசனின் தமாகாவை காங்கிரஸ் கூட்டணிக்கு அழைக்கும் திருநாவுக்கரசர்!

Published

on

முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமாக இருந்த ஜி.கே.வாசன் சில வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனியாக தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். தொடக்கத்தில் ஜி.கே.வாசனுடன் சென்றவர்களில் பலர் தற்போது அங்கிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தனர்.

இந்நிலையில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசனுக்கு அழைப்பு சென்றுள்ளது. வரும் மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் ஜி.கே.வாசனின் தமாகா எந்த கூட்டணிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியது. மேலும் தமாகா பாஜக, அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து தமாகாவை தங்கள் கூட்டணிக்கு அழைத்துள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். புதுக்கோட்டையில் பேட்டியளித்த திருநாவுக்கரசர் ஜி.கே.வாசனின் தமாகா காங்கிரஸ் கூட்டணிக்கு வர விரும்பினால் கட்சிதலைமை பரிசீலிக்கும் எனவும் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் தெரிவித்தார். தமாகா இந்த கூட்டணிக்கு வரும்பட்சத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து ஒரு தொகுதியை தமாகாவுக்கு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version