இந்தியா

கர்நாடகாவில் பாஜகவுக்கு தண்ணி காட்டும் காங்கிரஸ்: இன்னைக்கு முடியாது என சித்தராமையா திட்டவட்டம்!

Published

on

கர்நாடக அரசியலில் மிகவும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் குமாரசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் நேற்று அமளி ஏற்பட்டதால் அவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் சட்டசபையிலேயே தூங்கினர்.

இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர்பாய் வாலா கெடு வித்தித்தார். இதற்கு முன்னர் நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் ஆளுநர் அதனை ஏற்காததால் இந்த கெடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநரின் இந்த வலியுறுத்தலுக்கு எதிராக கர்நாடகா முதல்வர் குமாரசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதற்கிடையில் கர்நாடக சட்டசபை இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. முதலில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி பேச தொடங்கினார். அப்போது பாஜகவின் எடியூரப்பாவை கடுமையாக தாக்கிப்பேசினார் குமாரசாமி. இதனைத்தொடர்ந்து இந்த விவாதத்தில் பலர் பேசி வருகின்றனர். இதனால் ஆளுர் கொடுத்த காலக்கெடு முடிந்த நிலையில் விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசுகையில், விவாதம் தற்போதும் முடியவில்லை. மேலும் 20 உறுப்பினர்கள் விவாதத்தில் பேச காத்திருக்கிறார்கள். அதனால் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது. திங்கள்கிழமை வரை இந்த விவாதம் தொடரும் என்றார் அதிரடியாக. இந்த காலகட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி சரிக்கட்ட முயற்சிக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version